Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர்.

சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.

கர்ப்பமாக இருந்த அந்த சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அச்சிறுமியின் தாய் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

காலம் கடந்து போக போக அச்சிறுமி கர்ப்பமுற்றால். சென்ற நாள் அச்சிறுமிக்கு மிகக் கடுமையாக வயிற்றுவலியும் இடுப்புவலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருமுறை அழைத்துச் சென்ற தாய் பிரசவத்திற்காக அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு டாக்டர் இல்லாத நிலையில் தாயும் அந்த சிறுமியும் வெளியே அமர்ந்திருந்தார்கள். சிறுமிக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் அருகே உள்ள ஒரு மறைவிடத்திற்கு சென்று அந்த சிறுமி குழந்தையை பெற்று எடுத்தாள்.

பின்னர் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு தாயும் மகளும்  அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்கு டாக்டர் வந்தார். அப்போது அந்த சிறுமியை தேடிய போது குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது பற்றி சமூக நலத்துறை நற்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின் பெயரில் உப்பிலியாபுரம் சமூக நலத்துறை அலுவலர் விஜயா மற்றும் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் அந்த சிறுமியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டது.

இதனையடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கண்ணன் மீது போகோ சட்டத்தின் கீழ் முசிறி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் 15 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது.

Exit mobile version