Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்!

the-mother-who-saved-the-life-of-the-chick-shocked-villagers

the-mother-who-saved-the-life-of-the-chick-shocked-villagers

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்!

திருவண்ணாமலயை அடுத்த அரட்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து இவரின் மனைவி சுகன்யா. இவர்களுக்கு எட்டு வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். மகன் பிரசன்னதேவ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மகள் ரித்திகா. கணவர் பூபாலன் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில் மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் அக்கம் பக்கத்தினர் அந்த செயலை கண்ட அதிர்ச்சி அடைந்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இதுகுறித்து போலீசார்ருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீஸார் சிறுமி ரித்திகாவின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வேலைக்குச் சென்ற தந்தைக்கு தாய் யாருடன் செல்போனில் பேசுகின்றார் என தகவல் கொடுப்பதாக கூறி ஆத்திரமடைந்த சுகன்யா குழந்தையை  தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே ரித்திகாவை சுகன்யா கடுமையாக துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தாய் சுகன்யாவை கைது செய்த போலீசார் வெறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும்  கணவன் இல்லாத நேரத்தில் மறைந்து பேசி மாட்டிக் கொண்டதால் பெற்ற மகளையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version