சூப்பர் மார்கெட்டில் கூடைக்குள் இருந்த மலைப் பாம்பு… பொருள் எடுக்க வந்த வாடிக்கையாளர் பாம்பை பார்த்து அதிர்ச்சி…
பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாங்கும் பொருள்களை போட்டு எடுத்து வரும் கூடைக்குள் மலைப் பாம்பு இருந்தது. இதை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.
பெரிய அளவுள்ள ராட்சத மலைப் பாம்புகளை நாம் வனப்பகுதிகளிலும் பூங்காங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அதையே வீடுகளின் அருகே அல்லது சாலைகளில் கண்டால் அலறி அடித்து ஓடுவோம். அது போல பரபரப்பான சம்பவம் அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடந்துள்ளது.
அமெரிக்கா நாட்டித் சியோக்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இருக்கும் பெரிய சூப்பர் மார்கெட் ஒன்றில் பாம்பு புகுந்துள்ளது. அங்குள்ள வாடிக்கையாளர் ஒருவர் பொருட்களை வாங்குவதற்கா அந்த வணிக வளாகத்திற்குள் சென்றார்.
ஷாப்பிங் செய்வதற்காக கூடையை எடுத்த அந்த வாடிக்கையாளர் அந்த கூடைக்குள் சமார் 6 அடி நீளம் உள்ள ராட்சதம மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அந்த வாடிக்கையாளர் அலறி அடித்து சத்தம் போட்டார்.
இதை அடுத்து அங்கு வந்த ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த சூப்பர் மார்கெட்டுக்கு வந்து மலைப் பாம்பை பிடித்து சென்றனர். இதை அடுத்து அந்த மலைப் பாம்பு சூப்பர் மார்கெட்டுக்குள் எப்படி வந்தது என்பது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.