Viduthalai Part 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை 2 நாளை திரைக்கு வர இருக்கிறது.
இந்த வருடம் 2024 ஆண்டில் தமிழ் மொழியில் வெளியான படங்கள் இந்திய அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றிப்படமாக அமைப்பெற வில்லை. குறிப்பாக கங்குவா, இந்தியன் 2, வேட்டையன் போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் நாம் கூற வேண்டும். ஆனால் கோலிவுட் இந்த ஆண்டு பல படங்கள் வெற்றிப்படமாக வந்துள்ளது.
அதாவது இந்த ஆண்டு வெளியான புஷ்பா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைய அந்த இடத்தை நிறைவு செய்ய தமிழ் திரையுலகில் இருந்து திரைப்படம் வெளிவராத என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமானவர் தான் வெற்றி மாறன்.
அதன் பிறகு இவரது இயக்கத்தில் வெளியான ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து. இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான படம் தான் விடுதலை – 1 இந்த படத்தில் காமெடி நடிகர் முதன் முதலாக ஹீரோவாக நடித்து இருந்தார்.
விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தார். இந்த படமானது ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலைத் தழுவி தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். விடுதலை – 1 படத்தின் இறுதி காட்சிகள் விடுதலை -2 தொடர்பான படத்திற்கான காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.
எனவே, விடுதலை -2 படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி,கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை -2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எனவே நாளை விடுதலை -2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.