Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணமான 5 நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட புது மாப்பிள்ளை! மாமனார் வெறிச்செயல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கு திருத்துறைபூண்டி நகர் பகுதியிலுள்ள மங்களநாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியா என்ற பெண்ணை பெற்றோர் திருமணத்திற்கு வரன் பார்த்தனர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு தன்னுடைய வீட்டில் மனைவியுடன் முத்தரசன் வசித்து வந்தார். இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி மாமனார் வீட்டில் நடந்த விருந்தில் முத்தரசன் தன்னுடைய மனைவியுடன் பங்கேற்று கொண்டு அங்கேயே தங்கி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் மறுநாள் பார்க்கும்போது புதுமாப்பிள்ளை முத்தரசன் மாமனார் வீட்டினருகே ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார்.

இதனை கவனித்த அந்தபபகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். குடும்பத்தினர் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள். முத்தரசன் மனைவியான புதுப்பெண் கதறி அழுதார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் முத்தரசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது முத்தரசனை அவருடைய மாமனார் ரவிச்சந்திரன் தான் வெட்டிக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

அதாவது முத்தரசன் அவருடைய மாமனார் ரவிச்சந்திரனை பலரின் முன்னிலையில் எதிர்த்து பேசியதாகவும், இதில் ஆத்திரமடைந்த மாமனார் முத்தரசன் வெட்டிக் கொலை செய்ததும், தெரிய வந்ததாக காவல்துறையினரின் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version