படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
218
The music composer who released the film's review!! Fans in celebration!!

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.  இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. இதன்பின்பு ரஜினி கோலமாவு கோக்கிலா,பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அவர் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில்  நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடக்கும் பட்சத்தில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது. மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரானா ஷிவ ராஜ்குமார் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீடு விழா மிக பிரமாண்டமாக ஜூலை மாதம் நடத்த இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான “காவாலா”  என்ற பாடல்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் பிறகு இரண்டாவது பாடலான “இது டைகரின் கட்டளை” வெளியாகி ரசிகர்களிடையே படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு  உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28ம் தேதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து 2 ஆம் தேதி ஜெயிலர் டிரைலர் வெளிவந்தது. அதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 10 தேதி வழியாக உள்ளது.

இந்த நிலையில் அனிரூத் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படம் பெயரை குறிப்பிட்டு கோப்பை எமொஜியை பதிவிட்டுள்ளார்.