Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு!

The mysterious gang threatened with a knife! Police attack!

The mysterious gang threatened with a knife! Police attack!

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு!

கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியை சேர்ந்தவர் ஆனந்தன். சாதாரண கூலி தொழிலாளி. இவர் இன்று காலையில் இரு சக்கர வாகனங்களில் தனது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று மூன்று மர்ம வாலிபர்கள் முகத்தில் கருப்புதுணிகளை கட்டியவாறு   வந்தனர் .

இந்நிலையில்  தனது 3 மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் மற்றும் அவர்கள் அணிந்து கொண்டிருந்த நகை ஆகியவை தரவில்லை  என்றால் உன்  பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன்  என மிரட்டினார்கள். தன் குழந்தைகளை விடுமாறு சொல்லியும் மூணு மர்ப வாலிபர்கள் குழந்தைகளின் கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் மோதலில் ஈடுபட்டார். அதில் கோபமடைந்த வாலிபர்கள் ஆனந்த் சரமாரியாக தாக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதல்களால் ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதை அறிந்த அக்கம்பக்கம் பகுதியினர் 60க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கூறினர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை விடுத்தனர். பின்னர் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி வந்தது.

Exit mobile version