Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர்!

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர்

கோவைமாவட்டம்சூலூரைச் சேர்ந்த ராயப்பன்மகன்செந்தில்குமார், ரங்கநாதபுரம்பகுதியில்அரிசி
கடைவைத்துள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று இவரது வீட்டிற்கு வந்த முகம் தெரியாத ஒரு நபர் தனக்கு ஐந்து மூட்டை அரிசி வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனை நம்பி கடைக்காரர் செந்தில்குமார் அந்த நபரை அரிசி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

முகம் தெரியாத அந்த நபர் தனக்கு ஐந்து மூட்டை அரிசி வேண்டுமென்றும், மூட்டைகளை வீட்டில் இறக்கியதும் பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.மேலும் 5 மூட்டையில் இரண்டு மூட்டையை தனது வண்டியில் வைத்துக் கொள்வதாகவும்,மீதி மூன்று முட்டையை கடைக்காரரின் வண்டியில் வைத்து பின் தொடர்ந்து வருமாறு கூறியுள்ளார்.இதனை நம்பி கடைக்காரர் இரண்டு மூட்டை அரிசியை முகம் தெரியாத நபரின் வண்டியில் வைத்து,மீதி மூன்று மூட்டையை தனது வண்டியில் வைத்து பின் தொடர்ந்துள்ளார்.திடீரென்று அந்த முகம் தெரியாத நபர் இரண்டு மூட்டை அரிசிகளுடன் மாயமானார்.வண்டியில் நம்பர் பிளேட் ஒட்டாததால், செந்தில்குமாருக்கு அந்த முகம் தெரியாத நபரை அடையாளம் காண முடியவில்லை.இதனால் மனம் நொந்து தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளின் அடிப்படையில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் தன்னை போன்று வேறு யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version