அலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!!
சென்னையில் கடற்படை வாகனம் மோதியதில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்திருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த லலிதா என்னும் நிறைமாத கர்ப்பணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை அங்கிருந்த பொதுமக்கள் துரத்தி பிடித்து கடற்படை வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினர்.பிறகு இது குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,
வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 8 மாத குழந்தை ஏற்கனவே வயிற்றில் இறந்து விட்டதாக கூறினர்.இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த ஓட்டுநரை கைது செய்ததுடன் இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவர் சிவா ரெட்டியும், கடற்படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுனரின் கவன குறைவால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.