Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நட்புக்குள் வந்த திடீர் விரிசல்.. உதயநிதிக்கு எதிராக அன்பில் மகேஷ் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

The new change in the education sector.. Action taken by Anbil Mahesh against Udayanidhi!!

The new change in the education sector.. Action taken by Anbil Mahesh against Udayanidhi!!

 

நட்புக்குள் வந்த திடீர் விரிசல்.. உதயநிதிக்கு எதிராக அன்பில் மகேஷ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், இனிவரும் நாட்களில் உயர்நிலைப் பள்ளியில் 700 மாணவர்களுக்கு இரண்டு உடற்கல்வி ஆசிரியரும் அதுவே 700க்கு மேலிருக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் முன்பு முன்னுருக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்நிலையில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற பாணியில் நியமிக்கப்பட்டனர்.இதனால் மூன்று உடற்கல்வி ஆசிரியர்கள் பணி புரிந்தனர்.ஆனால் தற்பொழுது இதனை ஒன்றாக மாற்றிய பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை பாமக தலைவர் ராமதாஸ் முதல் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் பள்ளி விழாக்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம் இந்த ஒரு ஆசிரியரும் உடற்கல்வி நேரத்தை கடன் வாங்க கூடாது மேலும் மாணவர்களின் விளையாட்டு திறன் அதிகரிக்க வேண்டுமென்று கூறினார்.ஆனால் தற்பொழுது உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் குறித்த இந்த அறிவிப்பானது மாணவர்களின் விளையாட்டுத் திறனை குறைப்பதோடு கற்றல் திறன் குறித்த அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி உயிருக்கு உயிரான நண்பர் உதயநிதி மாணவர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டுமென கூறிய நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அன்பில் மகேஷின் நடவடிக்கை உள்ளது.மேலும் ஒரு அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதுதானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதனிடையே இருவருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம் மேற்கொண்டு உதயநிதியிடம் இதைப்பற்றி கலந்துரையாடாமலே இவ்வாறான அறிவிப்புகளை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

Exit mobile version