செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்த புதிய மாற்றம்!! இவர்கள் கணக்குகள் மூடப்படும்!!

0
275

 

பெண் குழந்தைகளின் நலன் கருதி மத்திய அரசு கடந்த 2014 அன்று தொடங்கிய திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம்.இத்திட்டத்தில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து வரலாம்.

 

இந்தியாவில் உள்ள எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் கணக்கு தொடங்க முடியும்.பெண் குழந்தைகளுக்கு அதிக பயன் தரும் திட்டமாக இது உள்ளது.இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

 

இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1,000 ஆகும்.அதிகபட்ச முதலீட்டு தொகையாக மாதம் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம்.அதிகபட்சம் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்க முடியும்.இரட்டை பெண் குழந்தைகள் இருந்தால் ஒரே குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் மீது செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும்.

 

குழந்தைகள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார்,பான்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வமகள் சேமிப்பு

திட்டத்தில் கணக்கு தொடங்கி சேமிக்கலாம்.குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது.

 

இந்நிலையில் தற்பொழுது இந்த திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.கடந்த அக்டோபர் 01 முதல் இந்த புதிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் மட்டுமே செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்பது ரூல்ஸ்.ஆனால் பெண் குழந்தைகள் தாத்தா,பாட்டி உதவியுடன் கணக்கு தொடங்கியிருந்தால் அவை விரைவில் மூடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

 

மேலும் தாத்தா பாட்டி உதவியுடன் தொடங்கப்பட்ட கணக்கை தங்கள் அதிகாரபூர்வ பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயருக்கு மாற்றிவிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.