Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு!

The new customs fee will be effective from April 1! The announcement of the National Highways Department!

The new customs fee will be effective from April 1! The announcement of the National Highways Department!

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சுங்க கட்டணம் அமல்! தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திருத்தப்பட்ட சுங்க கட்டண விவரங்களை அண்மையில் அறிவித்தது.

அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகம், கோவை மற்றும் மதுரைக்குச் சென்று திரும்பும் வாகனங்களுக்கு முன்பாக செலுத்தப்படும் கட்டணத்தை விட கூடுதலாக ரூ 5 முதல் ரூ 55 வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை ஒரு முறை கடந்து செல்லும் காரு உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கான கட்டணம் 70 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சிற்றுந்து இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ 110 லிருந்து ரூ  120 ஆக சுங்க கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து டிரக்குகளுக்கு 235 ரூபாயிலிருந்து 255 ரூபாய் என சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்களுக்கு 255 ரூபாயிலிருந்து 250 ரூபாய் ஆகவும் பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்களுக்கு 370 ரூபாயிலிருந்து ரூம் 400 ஆகவும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது.

அதிக அளவு கொண்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூ.485 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்க சாவடிகளில் 29 சுங்க சாவடிகளில் வரும் ஒன்றாம் தேதி முதல் இந்த சுங்க கட்டணம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version