Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு!

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு!

உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவியது. இந்த ஒமைக்ரான் வருகைக்கு பிறகு உலகின் பல நாடுகளிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது ஒமைக்ரானின் புதிய மாறுபாடான பி.ஏ.2 வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரானின் பி.ஏ.2 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பி.ஏ.2 வைரஸ் காரணமாக அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளில் 35 சதவீதம் பேர் ஒமைக்ரானின் பி.ஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் பி.ஏ.2 மாறுபாடு தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஒமைக்ரானின் புதிய உருபான பிஏ.2 ஒருசில நாடுகளில் பரவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவிலும் இந்த பிஏ.2 வைரஸின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version