Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய அரசு வளர்ச்சியின் பாதையில் பணியாற்றும்-சோனியா காந்தி!

#image_title

கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய அரசு வளர்ச்சியின் பாதையில் பணியாற்றும்-சோனியா காந்தி!

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்த ராமையாவும் துணை முதல்வராக டி கே சிவகுமார் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்தமைக்கு கர்நாடக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும் என, தான் உறுதி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version