Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இணையத்தில் வைரலாகி வரும் புதிய காதல் ஜோடி! எனக்கு ‘rugged boy’ தான் பிடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி பேட்டி!

The new love couple that is going viral on the internet! I like 'rugged boy' Aishwarya Lakshmi interview!

The new love couple that is going viral on the internet! I like 'rugged boy' Aishwarya Lakshmi interview!

இணையத்தில் வைரலாகி வரும் புதிய காதல் ஜோடி! எனக்கு ‘rugged boy’ தான் பிடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி பேட்டி!

தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் ஐஸ்வர்யா லஷ்மி.இவர் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை தாயரித்தும் வருகின்றார்.மேலும் இவர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான அஷான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம்,கேப்டன் படத்தில்  ஆர்யாவுடன் நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தில்  முக்கிய காதபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை இவரே தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற பொன்னியன் செல்வன் பாகம் 1ல் பூங்குழலி கதாபாத்திரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து பலருடைய மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா லஷ்மி.

கடந்த ஆண்டு பெண்களை கவரும் வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படம் செல்லா அய்யாவு இயக்கம் மற்றும்  இந்த படத்தில்  இவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது அவருடைய டுவிட்டர் பக்கத்தில் புகைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கைதி ,மாஸ்டர் என பல படங்களில் நெகடிவ் ரோலில் நடித்த அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தின் கீழ் ஒரு ஹார்டின் மட்டும் போட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா லஷ்மி மற்றும் அர்ஜுன் தாஸ்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புதிய காதல் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் ஐஸ்வர்யா லஷ்மி படவிழாவில் கூறுகையில் தனக்கு rugged boy தான் பிடிக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version