Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது.

தற்பொழுது ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொற்றானது வட மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. குஜராத், ஹரியானா ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் மாடுகளை அதிக அளவு இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் மற்றும் தற்பொழுது வரை 57 ஆயிரம் மாடுகள் உயிரிழந்து உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வைரஸ் ஆனது கொசு ஈக்கள் மூலமாக கால்நடைகளுக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் ஆனது பரவி 14 நாட்களில் தீவிரம் அடைந்து காய்ச்சலாக மாறுகிறது. இந்த வைரஸின் முதல் அறிகுறையை காய்ச்சல் தான். பின்பு கால்நடைகளின் தோள்களில் சிறிதளவு கட்டிகள் உருவாகின்றது. ரத்த நாளங்கள் வீக்கம் அடைவதுடன் கல்லீரல் நுரையீரல் மண்ணீரல் ஆகியவும் பாதிப்படைந்து இறுதியில் உயிரிழக்கின்றது. ஹிமாச்சல அரசு மத்திய அரசிடம் இந்த வைரஸை வேகமாக பரவும் தொற்று என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இந்த நோய் பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு அதனை செலுத்தியும் வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை கட்டாயம் ஆக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version