விறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!

0
168

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வேகமாக தயாராகி வருகிறது, இங்கே பயன்படுத்துவதற்கான தரை விரிப்புகள் தேக்கு மரத்திலான மேஜைகள் போன்றவையும் தயார் நிலையிலிருக்கின்றன புதிய நாடாளுமன்ற வளாகம் அடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதனடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமையவிருக்குகிறது.

இந்தத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையில் 70% பணிகள் முடிந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது.

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலிருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு நடுவே தரையமைக்கும் பணியும் உள்ளலங்கார பணிகளும், மிக விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பயன்படுத்துவதற்காக உத்தரப்பிரதேசத்தின் மிர்சாப்பூரிலிருந்து அலங்கார தரை விரிப்புகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதோடு டேபிள், நாற்காலி, போன்ற தேக்கு மரத்திலான மரச்சாமான்கள் மகாராஷ்டிராவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.