அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்கு அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையில் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு நகல் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இன்றுவரை ஜாமீன் கிடைக்காமல் போராடி வருகிறார்.
எனவே அவர் அடுத்கட்டமாக ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று முறையிட்டார், இதன் மூலம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதனால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.அவரது ஜாமின் மனு சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டிற்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் அமலாக்கத் துறையினரின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்து இருந்தார்.
ஆனால் அதன் மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இதற்கு முக்கிய காரணம் அமலாக்கத்துறை தாமதமாக ஆவணங்களை கொடுத்ததுதான்.
மேலும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த பதில் மனதில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த பதிலில் 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் அமலாக்கத்துறையினர் வேண்டுமென்றே வழக்கை தாமதம் செய்வதாகவும் கடைசி நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்வதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு முறைக்கு மேல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் முன்தினம் நடைபெற்ற வழக்கில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறையானது மே 18ம் தேதி முதல் ஜூலை ஏழாம் தேதி வரை விடப்படுகிறது.
இதனால் உச்சநீதிமன்ற நீதிபதி அமலாக்கத்துறையினரின் வாதங்களை கேட்காமல் ஜாமீன் வழங்க முடியாது என அடுத்து ஜூலை 10ஆம் தேதிக்கு மனுவை ஒத்தி வைத்தது. இதனால் மேலும் ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. வழக்கில் விதி விளையாடுகிறது என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.