தமிழக மக்களின் தலையில் விழும் அடுத்த குண்டு!! கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!! 

0
160
The next bomb will fall on the heads of the people of Tamil Nadu!! Kathari Veil Agni Nakshatra Starts Today!!
தமிழக மக்களின் தலையில் விழும் அடுத்த குண்டு!! கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!!
கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று(மே4) முதல் தொடங்குவதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோடை வெயில் காரணமாக கோடை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகின்றது. தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அடிக்கின்றது. மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று(மே4) தொடங்குகின்றது.
தமிழகத்தில் இன்று(மே4) முதல் தொடங்கும் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் அடுத்த 25 நாட்கள் இருக்கும். பொதுவாக வெயில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு தான் 100 டிகிரியை தாண்டி அடிக்கும். ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி அடிக்கின்றது. இந்நிலையில் இன்று(மே4) தொடங்கும் கத்தரி வெயில் மே 28ம் தேதி வரை மக்களை வாட்டி வதைக்கவுள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வழக்கத்தை விட அதிகமாக வீசும் என்றும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.