நிவின் பாலியின் அடுத்த அவதாரம்!! இவரும் சூரியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்!!
நிவின் பாலி இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். மேலும் இவர் நடித்த பிரேமம் என்னும் மலையாள திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
அதன் பிறகு மலையாளத்தில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். பெங்களூர் டேசு மற்றும் 1983 திரைப்படங்களுக்காக 2015 ஆம் ஆண்டின் கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் பிரேமம் படத்திற்குப் பின்பு தான் இவரை பற்றி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று நடிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து அத்திரைப்படத்தை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகை அஞ்சலி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டர் இச்செய்தியின் இடையில் இணைக்கப்பட்டுள்ளது. போஸ்டருக்கு ரசிகர்கள் தங்களின் பெருமளவு ஆதரவை அளித்து வருகின்றனர்.