திருவள்ளூர்மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள், மூன்றுஇளம்பெண்கள் மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்தை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த ஏழாம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் .நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறுமி கிடைக்கவில்லை என்பதால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
அதேபோல, திருமலிசை -காமராஜர் தெருவை சேர்ந்த ரவியின் மகள் மீனா (23), கடந்த ஏழாம் தேதி அன்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் , நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
திருத்தணி பகுதியில் சீனிவாசபுரத்தை சேர்ந்த ராமனின் மனைவி புவனேஸ்வரி (21) மற்றும் அவர்களது மகள் (5) ஆகியோர், கடந்த 29-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே போனார்கள் .ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை.
மேலும்,பொன்னேரி அருகே புலிக்குளம் கிராமத்தை சேர்ந்த சிவந்தகோபாலின் மகள் ஹேமாவதி (22),கடந்த 7-ம் தேதி காலை பொன்னேரியில் உள்ள கால் சென்டர் பணிக்கு சென்று, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி கிடைக்கவில்லை என்பதால் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுத்துள்ளனர்.
இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மப்பேடு, வெள்ளவேடு, திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையினர் காணாமல்போன பெண்களை மற்றும் சிறுமிகளை தேடி வருகின்றனர்.காணாமல் போன பெண்களைப்பற்றி குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.அடுத்தடுத்து காணாமல் போன இளம் பெண்கள் மாயமால், அப்பகுதியில் பதற்றம் அதிகமாக நிலவிவருகிறது.