Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் சேதுபதி நடித்துள்ள “துக்ளக் தர்பார்” படத்தின் அடுத்த ரிலீஸ்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் அண்ணாத்த செய்தி பாடல் சற்று முன் வெளியானது.

 

டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கும் “துக்ளக் தர்பார்” எனும் முழு அரசியல் களமாக இருக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

 

இந்தப்படத்தின் அண்ணாத்த செய்தி எனும் பாடலின் வரிகள் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. இதனை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இந்தப் பாடல், “எங்கேயோ இருந்து வந்த ஒருத்தன், நம்ம இடத்தை பிடிச்சு, நம்மள ஏமாத்தி, நம்மள அடிமையாக்கி, நம்ம தல மேல ஏறி உட்கார வரைக்கும், எல்லாமே சரியாகும் அப்படின்னு நினைச்சு சும்மாவே இருந்துடக் கூடாது” எனத் தொடங்கும் இந்தப் பாடலின் வரிகள் தற்போது யூடியூபில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

 

பாடலின் லிங்க்

Tughlaq Durbar | Annathe Sethi Song Lyric Video | Vijay Sethupathi | Govind Vasantha | Delhiprasad

Exit mobile version