அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்! 

0
280
#image_title

அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்! 

பிரபல இணையதளம் நிறுவனம் ஒன்று ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, ஆகிய காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா,   உலகப் பொருளாதாரம் 2023 இல் 3-இல் ஒரு பங்கு மந்த நிலையை சந்திக்கும் என்று  இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படியே உலகப் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து வருகிறது. 

இதையடுத்து பொருளாதார மந்த நிலையின் விளைவாக பெரும் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து பிரபல இணைதள தேடுபொறி நிறுவனமான ‘யாகூ’ 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கடுமையான பொருளாதார நிலைத்தன்மை காரணமாக தங்கள் ஊழியர்களில் 12 சதவீத ஊழியர்களான 1000 பேரை  இந்த வார இறுதியில் பணி நீக்கம் செய்ய “யாகூ” நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் மாதங்களில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் யாகூ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப  துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.