அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன??
அமலாக்கத்துறையினர் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அதிமுக ஆட்சியில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான பண மோசடி வழக்கில் ஈடுபட்ட முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கு மத்திய பாதுகாப்பு படையுடன் அமலாக்க துறை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது. அடுத்து சென்னை மற்றும் விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமைச்சரின் மகனின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மூத்த அமைச்சரான பொன்முடியின் வீட்டில் நடைபெறும். இந்த சோதனையால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2006-11 ஆண்டு காலங்களில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த காலங்களில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன்மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் வீட்டில் சோதனை செய்து வருவதாக கூறிய போதிலும் இன்னும் அமலாக்கத் துறை சோதனைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை.
மேலும் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியின் வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.