Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

#image_title

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்! 

எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் தடுத்து நிறுத்திய கிராம மக்கள் பணியை தொடங்கிய அடுத்த நொடியே திரும்பி அனுப்பப்பட்ட ஜேசிபி எந்திரங்கள்.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. இன்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வளையமாதேவி கிராமத்தில் உள்ள வயல் நிலங்களில் என்எல்சி நிறுவனம் திடீரென வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுவரை என்.எல்.சி நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு அழைக்காத நிலையில் எங்களுக்கு தரவேண்டிய இழப்பீடு இதுவரை வந்து சேரவில்லை இந்த நிலையில் திடீரென என்எல்சி நிறுவனம் பணிகளை தொடங்கியதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியில் நான்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகளை தொடங்கிய நிலையில்  நிர்வாகம் மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர். என்எல்சி நிறுவனம் பேச்சுவார்த்தை அழைக்க வேண்டும் எங்களுக்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version