தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!
முன்பதிவு செய்த இரயில் பெட்டியில் வடமாநிலத்தவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் வெளியே இறக்கி விட்டனர். இதுபற்றிய பரபரப்பு சம்பவம் வருமாறு;
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்வதற்கு பெங்களூர் விரைவு இரயில் நின்று கொண்டு இருந்தது. அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் திபுதிபு வென மூட்டை முடிச்சிகளுடன் முன் பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டியில் ஏறியுள்ளனர்.
உள்ளே ஏறியதும் அவர்கள் பயணிகளின் இருக்கையை ஆக்கிரமித்து கொண்டு 4 பேர் அமரக்கூடிய இடத்தில 7 பேர் தங்களின் மூட்டைகளுடன் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடம் தராமல் அமர்ந்து உள்ளனர். இவர்கள் யாரும் டிக்கெட் எடுக்கவில்லை. மேலும் இவர்கள் டிக்கெட் எடுத்தவர்களின் இடங்களில் அமர்ந்து அடாவடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் இரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இரயில் திருவொற்றியூரில் இரயில்
நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக அனைத்து முன் பதிவு பெட்டிகளில் ஆய்வு செய்த போலீசார் டிக்கெட் எடுக்காமல் இருந்த சுமார் 1000 வட மாநில மக்களை கண்டித்து மிரட்டி வெளியே அனுப்பினர்.
இந்த கூட்டத்தில் பல பெண்களும் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொண்டது போலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது போன்ற பல சம்பவங்கள் நடப்பதால் முன்பதிவு செய்பவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இறக்கிவிடபட்டவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஜெஜெ என தேனீக்கள் கூட்டம் போல மக்களின் தலைகள் தென்பட்டன.
அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் ரெயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிய டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.