Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா PANNED ஏடிஎம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

The number of ATMs in India is decreasing

The number of ATMs in India is decreasing

ATM:இந்தியாவில் ஏடிஎம் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

நாம் பணத்தை பெற வங்கிக்கு சென்று சாலன் எழுதி
பின்பு நீண்ட வரிசையில் நின்று கொண்டு பணப்பரிமாற்றம் செய்வோம்.  இவற்றை எளிமையாக்கும் வகையில் தான் ஏடிஎம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தியாவில் அதிக அளவில் ஏடிஎம்  மூடப்பட்டு வருகின்றன. என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது.

இப்போது பணம் பரிமாற்றம் ஆன்லைன் வழியாக நடப்பதால் அதுவும் மிக எளிமையாக கைப்பேசி மூலம் நடைபெறுகிறது. மக்கள் தற்போது அதிக அளவில் UPI மூலம் பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். இதுவே ஏடிஎம் கள் மூடுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

மேலும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் ஏடிஎம் இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு 2 லட்சத்து 15 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. என  ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 15 ஏடிஎம்  என்ற அடிப்படையில் தான் உள்ளது. பெரும்பாலும் மக்கள் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் , வைப்பு தொகையை பார்ப்பதற்கு ஏடிஎம்  கட்டணம் வசுலிக்கப்படுகிறது இதுவே மக்கள் வெகுவாக ஏடிஎம்  பயன்படுத்தாமல் இருக்க காரணம் ஆகும்.

இருப்பினும் வெகுஜன மக்கள் தற்போது தான் ஏடிஎம்  பயன்படுத்த அதிகரித்து இருக்கிறார். எந்த நிலையில் ஏடிஎம்கள் மூடப்பட்டு  வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

Exit mobile version