புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

0
127
The number of cases of new type of corona infection has increased to 7! People in shock!

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

இப்போதுதான் கொரோனாவின் கோர பிடி சற்று குறைந்துள்ளது. அதன்  காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வெளியில் நடக்க ஆரம்பித்து உள்ளனர். தற்போது அதெப்படி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தும் புதிய AY 4 என்ற புதிய கொரோனா வகை தோற்று பரவ ஆரம்பித்து உள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ் கர்நாடகாவிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் இது கொரோனா வைரஸை காட்டிலும்  அதிவிரைவாக பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய வகை வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கர்நாடகாவில் தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆணையர் டி.ரன்தீப் கூறும்போது இவ்வாறு கூறினார். கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 7 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பெங்களூருவில் 3 பேரும், மாநிலத்தின் பிற பகுதிகளில் நான்கு பேரும் என இந்த புதிய வகை கொரோனா பாதிப்புக்கு 7 பேர் உள்ளாகியுள்ளனர். மேலும் இதை தொடர்ந்து மாநிலத்தில் இந்த வைரஸ் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்ன அரசு ஆணை விதித்துள்ளது.

வேகமாக பரவக்கூடிய இந்த புதிய வகை தொற்றை கண்காணிக்கும் விதமாக மத்திய அரசுடன் இணைந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புதிய வகை தொற்று பாதிப்புகளினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், எனினும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.