Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

#image_title

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

2022 ம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61.9 லட்சமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 61.09 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை வந்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுலா மூலம் பெறப்பட்ட அன்னிய செலாவணியாக 2021 ம் ஆண்டில் ரூ.65,070 கோடியும் 2022 ம் ஆண்டில் ரூ. 1,34,543 கோடியும் பெறப்பட்டுள்ளது.

166 நாடுகளின் மக்களுக்கு இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவி விசா மற்றும் இ-கான்பரன்ஸ் விசா ஆகிய 5 துணை வகைகளுக்கு இ-விசா வசதியை வழங்குதல் எளிமையாக்கப்பட்ட இ-விசா மற்றும் விசா கட்டணம் கணிசமாக குறைப்பு உள்ளிட்ட சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

Exit mobile version