Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்!

The old man around the snake's neck! Shocked villagers!

The old man around the snake's neck! Shocked villagers!

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்!

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அதேபோல சில பேருக்கு பாம்பை பார்த்தாலே பயம் வந்துவிடும். சில பேர் பயத்தின் காரணமாக அதை அடித்தும் கொன்று விடுகின்றனர். அப்படி இருக்கையில், பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில்  ஒரு முதியவர் வாழ்ந்து வருகிறார்.

அவர் வீட்டிற்குள் நேற்று காலை ஒரு நாகப் பாம்பு புகுந்தது. ஆனால் பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை தன் கையால் பிடித்து லாவகமாக வைத்து பின்னர் அந்த பாம்பை தனது கழுத்தில் சுற்றி வைத்து உள்ளார். அதன் பின்னர் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும், அதாவது  தனது கிராமத்தையே வலம் வந்துள்ளார்.

இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பாம்பை விட்டு விடும்படியும் கதறினர். இதையடுத்து அந்த முதியவர் பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது

Exit mobile version