தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்!
இன்றைய சூழலில் மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் விஷயம் ஆக கொரோனா மாறி உள்ளது.கோவிட் 19 என்று சீனாவில் இருந்து பரவப்பட்ட கொரோனா வின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதன் பாதிப்பு அமெரிக்கா,பிரான்ஸ்,பிரேசில், ஜெர்மன் ஆகிய நாடுகளில் குறைந்தது.தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி,குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இத்தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
சென்னையில் பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்த செல்லையா (65) என்பவர் கொரோனா தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.சிகிச்சை முடிந்து கடந்த 29ந்தேதி அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமை படுத்தப்பட்டு இருந்தார்.தனிமைபடுத்தப்பட்ட காரணத்தினால்மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த செல்லையா நேற்று இரவு சிகிச்சை மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எனவே அரசாங்கம் கூறிய அறிவுரைகளை மதித்து நடப்போம். பரவி வரும் கொரோனாவை ஒழிக்க நாம் அரசாங்கத்துடன் இணைந்து தனி மனித இடைவெளியை பின்பற்றுவோம்.முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வோம்.