Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ரயில்வே கேட் பகுதியில்,இறந்த நிலையில் ஆணின் உடல் கிடந்துள்ளது.
அதிகாலையில் அங்கு சென்ற பொதுமக்கள் ஆணின் சடலத்தை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காரமடை காவல்துறையினர்,அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தனர்.
அவரது உடலில் அதிக ரத்தப்போக்கு இல்லாததனால் அடிப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சுதாரித்த காவல்துறையினர் இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.

பின்னர் அவர் குறித்து விசாரித்தபோது அவர் அப்பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கு வந்த நபர் என்று சிலர் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து தனலட்சுமி வீட்டிற்கு சென்று தனலட்சுமி மற்றும் அவரது தாய் மல்லிகாவையும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அவர்கள் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று கொலைக்குற்றத்தை தாங்களே ஒப்புக் கொண்டனர்.இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர் அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

அதாவது தனலட்சுமி என்பவர் கணவனை இழந்து குழந்தைகளுடன் தனது தாயுடன் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு
ரத்தினபுரியைச் சேர்ந்த, குடும்பத்தை பிரிந்து தனிமையில் வசித்து வரும்,50 வயதான பெரியசாமி என்பவர் கணவரை இழந்த 32 வயது மதிக்கதக்க தனலட்சுமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியது மேலும்,தனலட்சுமியை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கூறி தொந்தரவு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
தொலைபேசி மட்டுமல்லாமல் நேரில் சில இடங்களிலும் அவர் தனலட்சுமியை சீண்டியதாக தெரியவந்துள்ளது.பெரியவரின் இந்த செயலை குறித்து தனலட்சுமி தனது தாய் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

பின்பு தனது தாய் மற்றும் உறவினர்கள் கூறியதற்கு இணங்க,தனலட்சுமி அந்தப் பெரியவரை,வீட்டின் முகவரி கொடுத்து வீட்டிற்கு அழைத்துள்ளார்.தன்னை உல்லாசமாக இருக்கதான் அழைத்தார் என்று ஆசையாக வந்த பெரியவருக்கு அங்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.ஏனெனில் முகவரி கேட்டு தனலட்சுமி வீட்டிற்குள் நுழைந்த பெரியவர் அங்கு தனலட்சுமி மற்றும் அவரது தாய் மற்றும் சில உறவினர்கள் சுத்தி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக தப்பிக்க முயன்ற அந்த பெரியவரை பிடித்து தனலட்சுமி உள்ளிட்ட அவரது உறவினர்கள் அவரை மரத்தில் கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் முதியர்.கொலை செய்தது மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவரின் உடலை அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் தூக்கி வீசிவிட்டு அடிபட்டு இறந்தது போல் டப்பிங் செய்து விட்டு,வீட்டிற்கு வந்து விட்டதாக தனலட்சுமி மற்றும் அவரது தாயார் மல்லிகா கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

Exit mobile version