பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்! அரசு வெளியிட்ட தகவல்!
கடந்த மாதம் 12 ஆம் தேதி இமாசலபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த 8 ஆம் தேதி எண்ணப்பட்டது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை வகித்து வந்தனர்.
இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்கள் வெற்றி பெற்றது.ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கொண்டாட்டத்தில் இருந்தனர்.இந்நிலையில் இமாசலபிரதேச மாநிலத்தின் 15 வது முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார்.மேலும் அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இதனை தொடர்ந்து துணை முதல் மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றார்.அதன் பிறகு மந்திரிகள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகின்றது.மேலும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கூறுகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
தேர்தல் வாக்குறுதியாக 10 உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதனை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ஆட்சி நேர்மையான ஆட்சியாக அமையும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.