கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மனைவி கற்பகம். இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள் உள்ளனர்.அவர்களின் பெயர் ஜனனி, ஜஸ்வந்தி, மாலிகா ஆகும்.
சினிமா துறையில் கொடி கட்டி பறக்க கூடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் நினைத்து இருந்தால் அவருடைய மகள்களை திரைக்கு எளிதாக கொண்டு வந்து இருக்க முடியும்.ஆனால் அவர் அதற்கு மாறாக சினிமாவிற்கு நீங்கள் வரக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்ததாக அவருடைய மகள்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இவருடைய முதல் மகள் ஜனனி பிட்னஸ் ஆர்வலராக இருக்கிறார். அதோடு சொந்தமாக தொழில் செய்தும் வருகிறார். அதன் பின், ஜஸ்வந்தி ஒரு மருத்துவர். அர்மோரா என்ற டெர்மடாலஜி என்ற கிளினிக் வைத்திருக்கிறார். இவருடைய கணவர் ஆனந்த் என்பவரும் மருத்துவரே. மாலிகா லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்படி முவரும் படித்து நல்ல நிலையில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு வேலை சினிமாவினுடைய மறு முகம் தெரிந்ததால் தான் தன்னுடைய மகள்களை சினிமாவிற்கு வரக் கூடாது என சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறார் போல.இதன் முழு உண்மை அவரே சொல்லாமல் யாருக்கும் தெரியாது.