Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்யாணத்துக்கு அப்புறமும் மவுசு குறையாத ஒரே நடிகை!! 

நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர்.

இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஜுன் இன் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை குழந்தை பெற்று கொள்ளாமல் தனது  சினிமா துறையிலும் மார்க்கெட் இழக்காமல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஆனால் சமீபத்தில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை பார்த்தவர்கள் சமந்தா ஓவர் ஆக்டிங் செய்துவிட்டார், த்ரிஷா போன்று இயல்பாக நடிக்கவில்லை என்று விமர்சித்தார்கள்.

இதையடுத்து  அவர் தற்போது தெலுங்கில் ஒரு படத்திற்கு 3.5 கோடி சம்பளம் கேட்ட செய்திகள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

தற்போது நயன்தாரா 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு போட்டியாக சமந்தாவும் கிளம்பியுள்ளார்

இந்த லவ் டவுன் காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் வெப் சீரியல்  பிரபலமாகி வரும் நிலையில் அதில் நடிக்கும் சமந்தா திட்டமிட்டுள்ளார்.

 

 

 

Exit mobile version