Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு சரியாக தண்ணீர் வருவதில்லை என்றும் அதற்கு நீ தான் காரணம் என்றும் தகாத வார்த்தையால் சுப்பிரமணியை திட்டினார்கள்.

மேலும் பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் கோபமடைந்து சுப்பிரமணியை தாக்கினார்கள். இந்த தாக்குதலில்  சுப்ரமணி பலத்த  காயம் அடைந்தார்.  அதை கண்ட அப்பகுதி மக்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சுப்பிரமணியை சேர்த்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் மீது புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் தந்தை மகன் இருவர் மீது வழக்கு பதிவு செய்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகராறு ஏற்பட்டதற்கு வேறு ஏதாவது காரணமுள்ளதா எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version