ஆஸ்திரேலியா : உதவி தொகை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பதினர் இதுவரை 12 முறை மீண்டும் மீண்டும் திருமணம்.
ஒருவர் பலரை திருமணம் செய்வதுதான் பார்த்துள்ளோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் மிகவும் வித்தியாசமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அரசு கொடுக்கும் உதவித்தொகைக்காக ஒரே நபரை கிட்டத்தட்ட 12 முறை திருமணம் செய்த அம்பலம் வெளியாகி உள்ளது. ஒரு தம்பதியினர் விவாகரத்து பெருகின்றனர் என்றால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று அர்த்தம். ஆனால் இங்கு அப்படி இல்லை, பணத்தைக் குறிக்கோளாக வைத்தே இவர்கள் விவாகரத்தை பெற்று அரசை ஏமாற்றி வந்துள்ளனர்.
1980 ஆம் ஆண்டே இந்த பெண்மணி திருமணம் செய்துள்ளார் ஆனால் அடுத்த ஓர் ஆண்டுகளில் அவரது கணவர் இறந்துள்ளார். அவர் இறந்ததால் இவருக்கு பெண்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஓராண்டுகளிலேயே லாரி டிரைவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இவரின் பழைய உதவித்தொகை நிறுத்தப்பட்டு இந்த புதிய திருமணத்திற்கான திட்டத்தில் நிவாரண தொகையாக வழங்கி வந்துள்ளனர். இதனை உணர்ந்த தம்பதியினர் அடுத்த ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் விவாகரத்து பெற்றுள்ளனர். அவ்வாறு விவாகரத்து பெறும் பொழுது அந்த பெண்மணிக்கு மீண்டும் விதவைக் காண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனையே வேலையாக மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். அதில் இவர்களுக்கு மூணு புள்ளி 42 லட்சம் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது.
இந்திய மதிப்பின்படி சுமார் இரண்டு கோடி ஆகும். பன்னிரண்டாவது முறையாக இவர்கள் விவாகரத்து பெரும்பொழுது இதனை அவ் அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது. மேற்கொண்டு இதற்கான எந்த உதவி தொகையும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளன. இதனை முழுமையாக ஒப்புக்கொள்ளாமல் அந்த ஜோடி எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது அதனால் தான் விவாகரத்து பெருகிறோம் என்று விவாதம் செய்து வருகின்றனர்.