Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

ரஜினிகாந்தின் 169 வதுபடமான ஜெயிலர் ஏப்ரல் மாதம் திரையில் வெளியிடப்படுகிறது.

பீஸ்ட் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு அனிருத் இசையமைக்கும் படம் தான் ஜெயிலர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினியின் 169 வது படமான இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இது ஏப்ரல் 14,2023 அன்று திரைக்கு வரவிருக்கிறது.

ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுவார் அவருக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

மேலும் ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கிய இடத்தில் தோன்றுகிறார். இது நடந்தால் மூன்று மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால்- ரஜினிகாந்த்- சிவராஜ் குமார் இணையும் ஒரே தமிழ் படம் என்ற பெருமையை ஜெயிலர் படம் பெறும்.

முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினிகாந்த் தோன்றும் இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த படமாகும்.

 

 

Exit mobile version