வைரமுத்துவின் வரிகளில் பி சுசீலாவின் குரலில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகி மெகா கிட்டான பாடல் வரிகளை பி சுசீலா அவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று வைரமுத்துவும் ஏ ஆர் ரகுமானும் பிடிவாதமாக இருந்துள்ளனர்.
தமிழில் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான “சண்டி ராணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் தமிழ் திரையுலகில் பாடகையாக சுசிலா அறிமுகமானார். அதன்பின் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைத்துறையில் மட்டும் இவருக்கு 70 ஆண்டு கால அனுபவம் உள்ளது மிகப் பெருமைக்குரிய விஷயமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.பல்வேறு சாதனைகளை கடந்து தனது 89 ஆவது வயதில் பயணித்து வருகிறார் சுசீலா அவர்கள்.
2021 ஆம் ஆண்டு பிரபல கவிஞர் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் உருவான ஒரு கவிதை தொகுப்பை, பாடலாக பாடியிருந்தார் சுசீலா. இப்போது வரை அதுவே அவருடைய இறுதி பாடலாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டு பிரபல நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும் நடிகருமான சுரேஷ் சந்திர மேனன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் “புதிய முகம்”. இந்த திரைப்படத்தின் கதை மட்டுமல்ல இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காலம் கடந்து இன்றளவும் பலருடைய விருப்ப பாடல்களாக இருந்து வருகிறது. ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், அந்த அனைத்து பாடல்களுக்கும் வரிகளை எழுதியது வைரமுத்து தான்.
இந்த பாடலை எழுதும் போது தமிழில் உள்ள ‘ல’கர வரிசையில் பல சொற்கள் அமைக்கப்பட்ட நிலையில், இதை நிச்சயம் சுசீலாவால் மட்டுமே பாட முடியும், ஆகையால் அவருடைய டேட் கிடைக்காவிட்டாலும், காத்திருந்து அவரை இந்த பாடலுக்கு பாட வைக்க வேண்டும் என வைரமுத்து அவர்கள் கூறியிருக்கிறார். இந்த பாடல் வரிகளுக்கு டியூன் போட்ட இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களும் இந்த பாடலை அவரை தவிர வேறு யாரு பாடினாலும் நன்றாக இருக்காது என்று முடிவு செய்து பி சுசிலா உடைய டேட் கிடைக்கும் வரை காத்திருந்த இந்த பாடலை ரெக்கார்ட் செய்துள்ளனர்.