பாடகி சொன்ன ஒரே வார்த்தை… – அந்த கறியை சாப்பிடுவதை விட்ட சிவாஜி – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

0
82
#image_title

பாடகி சொன்ன ஒரே வார்த்தை… – அந்த கறியை சாப்பிடுவதை விட்ட சிவாஜி – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த மேடை நாடகங்களில் ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த நாடகத்தைப் பார்த்து சிவாஜி கணேசனை தந்தைப் பெரியார் பெரிதும் பாராட்டினார். அவரை ‘சிவாஜி கணேசன்’ என்று அழைத்தார். காலப்போக்கில் இப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

இந்த புகழினால் சிவாஜிக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உணர்ச்சிப் பூர்வமாக நடிப்பதிலும், தமிழ் உச்சரிப்பதிலும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் கொண்டிருந்ததால, இவரை ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

ஒரு சேனலுக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் சிவாஜியை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

சிவாஜி கணேசன் வாழ்க்கையில் அசைவ உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார். அதுவும், குயில் கறியை வழக்கமாக சாப்பிடுவார். இப்படி அசைவ உணவை விரும்பி சாப்பிட்ட சிவாஜி ஒரு பழம்பெரும் பாடகி சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு இனிமேல் அதை தொடவே மாட்டேன் என்று சபதம் செய்தார்.

நடிகர் திலகம் சிவாஜியும், பாடகி லதா மங்கேஷ்கரும் அண்ணன், தங்கை போல் பழங்கி வந்தனர். லதா மங்கேஷ்கர் எப்போதெல்லாம் சென்னைக்கு வந்தாலும் சிவாஜி வீட்டில்தான் தங்குவார். சிவாஜியும் மும்பை சென்றால், லதா மங்கேஷ்கரின் வீட்டில்தான் தங்குவார்.

ஒரு நாள், சிவாஜி வீட்டிற்கு லதா மங்கேஷ்கர் வந்துள்ளார். அப்போது, சிவாஜி வீட்டில் நிறைய குயில்கள் இருந்துள்ளது. அதை பார்த்ததும் எதற்கு இத்தனை குயில்களை வளர்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு சிவாஜி எனக்கு இவையெல்லாம் உணவாகத்தான் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்டதும் லதா அதிர்ச்சி அடைந்துள்ளார். பறவைகள் பறக்க ஆசைப்படும். இப்படி கூண்டில் அடைத்து வைக்காமா? இப்போ… உடனே நீங்கள் அத்தனை குயில்களை பறக்க விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

உடனே சிவாஜி, தங்கை மேல் கொண்ட அன்பால், கூண்டை திறந்துள்ளார். குயில்கள் கூண்டிலிருந்து வெளியே பறந்து சென்றது. அப்போது சிவாஜிக்கு லதா மங்கேஷ்கர் ஒரு பாடலை பாடியுள்ளார். அன்றிலிருந்து சிவாஜி குயில் கறியை சாப்பிடுவதை விட்டுவிட்டார். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்குள் ஆழமான நட்பு இருந்துள்ளது என்று மனம் திறந்து பேசினார்.