உயர்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! இந்த பாடத்தில் சேர கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!
தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 423 கணினி பயிற்றுநர்கள் வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 4000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
குறிப்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை 6,000 ரூபாய் உயர்த்தி இனி வரும் மாதங்களில் ரூ 10 ஆயிரம் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு இந்த தொகுப்பூதியம் வழங்கப்படுகின்றது.இந்த திட்டத்தின் மூலம் புதிதாக பயிற்றுநர்களை வேலைக்கு சேர்க்க கூடாது என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின் படி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்சி திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணினி பாடப்பிரிவை பயிலாத மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ரூ 700 செலுத்தி இந்த திட்டத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.இந்நிலையில் கணினி அறிவு பயிற்சி பெற மாணவர்கள் செலுத்தும் தொகையில் இருந்து 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளனர்.