மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களை பொறுத்தவரை பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம்.
அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழா கொண்டாடும் விதமாக உள்ளூர் விடுமுறைகளை அறிவிப்பார்கள். அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் மற்ற மாணவர்களுக்கான முக்கிய தேர்வுகளும் மற்றும் பொது தேர்வுகளும் எவ்வித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.