மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
தமிழகத்தில் பொதுவாகவே அரசு சார்ந்த விழாக்கள், மற்றும் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் இறப்பு தினம், பண்டிகை தினங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேய இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு சில தனியார் நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் அனைத்தும் முற்றிலும் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதனால் நெல்லை மாவட்டத்தில் வரும் மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் மார்ச் 11 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் பொது தேர்வு நடைபெறுபவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.