Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the district collector of non-stop rain! Only school holidays here!

The order issued by the district collector of non-stop rain! Only school holidays here!

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.மேலும் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது.அதனால் நேற்று தமிழகத்தில் உள்ள ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.கோத்தகிரி  ,குன்னுர்,கூடலூர்,பந்தலூர்,ஊட்டி,குந்தா ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.மேலும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மழை தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி,குன்னூர் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version