உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி!

0
122
The order issued by the High Court! For the attention of those who have passed the “Det” exam!The order issued by the High Court! For the attention of those who have passed the “Det” exam!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி!

தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் தமிழக பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார்.அந்த அறிவிப்பின் படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நடப்பாண்டில் ஜூலை 12 முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்த வேண்டும் என கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து 41இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பினரும் அவரவர்களின் வாதங்களை முன்வைத்தனர்.அதன் பிறகு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒன்பது ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதில் இருந்து அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை கூறினார்.

மேலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.