விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் உள்ளூர் விடுமுறை!

0
336
the-order-issued-by-villupuram-district-collector-a-local-holiday-on-this-date

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் உள்ளூர் விடுமுறை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பண்டிகைகள், மழை போன்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அதனால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால் உயர்கல்வித்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சனிக்கிழமை தோறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இன்று புதுச்சேரியில் 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருத்தேர் உற்சவம் நடைபெற இருக்கின்றது. அதனால் அந்த உற்சவத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.