Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது!! ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உத்தரவு!

#image_title

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த வேண்டும் என உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை உத்தரவு.

தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதி 46 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு முறைகளை மேற்கோள்காட்டி தமிழக காவல்துறை டிஜிபி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

குறிப்பாக நிகழ்ச்சியின் போது யாரும் பாடல்கள் மற்றும் சாதி, மதம் ரீதியாக எந்த கருத்துகளையோ பேசக்கூடாது எனவும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொள்வோர் லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அதாவது சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஆக்கிரமிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரணியில் எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு கொடுக்கப்படும் என உறுதிமொழி எடுக்க வேண்டுமென எனவும் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத இடத்தை தேர்வு செய்து, சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக நிகழ்ச்சிகளை முடிக்க அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சனைக்குரிய இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் போட வேண்டும் எனவும் நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான திட்டத்தை வருகிற 15ஆம் தேதி காலை 10மணிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version