Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய்யுடன் இணையும் அசல் கோளாறு.. ரசிகர்களுக்கு தீனி போடும் தளபதி “69”!!

The original problem of connecting with Vijay.. Thalapathy "69" feeding fans!!

The original problem of connecting with Vijay.. Thalapathy "69" feeding fans!!

THALAPATHY 69: நடிகர் விஜய் நடிக்கும் “69” வது படம் பாடலை அசல் கோளாறு எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதால் திரை பயணத்தை தனது 69ஆவது படத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கொடி, உறுதி, பாட்டு என அனைத்தையும் கடந்த மாதம் வெளியிட்டார். பல சர்ச்சைகளுக்குள் இவரின் கட்சி கொடி சிக்கினாலும், தேர்தல் ஆணையமே அதில் தலையிட முடியாது என கூறிவிட்டது.

அந்த வகையில் தற்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநாடு நடத்துவது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தளபதி 69ஆவது பட பூஜை விழாவானது நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ஹீரோயினியாக மீண்டும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் இசை பொறுப்பை அனிருத்திடம் கொடுத்துள்ளனர். இதில் ஒரு பாடலுக்கு “ஜெருத்தாலே” அசல் கோளாறு பாடல் வரி எழுத உள்ளதாகவும் அதில் விஜய் பாட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தப் பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங் வரும் என பலரும் கூறுகின்றனர். அசல் கோளாறு பல பாடல்களில் மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக மார்க் ஆண்டனியின்
அதிருதா” பாடல் மிகப்பெரிய ஹிட். அந்த வரிசையில் தளபதியின் “69” ஆவது படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version