Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளை கலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் சட்டசபையை கூட்டி ஜனநாயகத்தை காக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version