Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வளர்ப்பு பூனைகளாலேயே கடித்து கொதறி கொலை செய்யப்பட்ட உரிமையாளர்!

ரஷ்யாவில் வீட்டிலிருந்து உயிரிழந்த பெண்ணின் அழகிய உடலை காவல்துறையினர் மீட்டனர். உயிரிழந்த பெண்ணுடன் பணியாற்றி வந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரிப்பதற்காக சென்றபோதுதான் அவர் வளர்த்த சுமார் 20பூனைகளே அவரை கடித்து குதறியது தெரியவந்தது.

இந்த சூழ்நிலையில், சற்றேறக்குறைய 2 வாரங்கள் வீட்டில் அந்தப் பெண்ணின் சடலம் பூனைகள் சூழ இருந்திருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

உரிமையாளரை கடித்து கொன்ற பூனைகள் அவர் இறந்த பின்னரும் கூட விடாமல் அவருடைய உடல் பாகங்களை தின்றது கண்டறியப்பட்டுள்ளது.

2 வாரங்களாக அந்த பூனைகளுக்கு அந்த உரிமையாளர் எந்த உணவும் கொடுக்காமல் வெளியே சென்றிருக்கிறார். அந்த பசியின் வெறியுடன் இருந்த அந்த பூனைகள் அந்தப் பெண்ணையே உணவாக மாற்றியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அதற்கான கால்நடை மருத்துவர்களை அணுகி போதுமான வழிமுறைகளை பெற்று செயல்பட வேண்டும் என்று காவல்துறையினர் தரப்பிலும், விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பிலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version